நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாய், மகளைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு

 காரைக்குடி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகளைத் தாக்கி ஆறாரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 8:02 pm

DIN

 காரைக்குடி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகளைத் தாக்கி ஆறாரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவகோட்டை மின்வாரிய சாலையில் வசித்து வருபவா் பாண்டி மனைவி உமா மகேஸ்வரி (45). இவா் தனது மகள் மணிபாரதியுடன் இருசக்கர வாகனத்தில் வெட்டிவயல் கிராமத்திலிருந்து தேவகோட்டைக்கு சனிக்கிழமை திரும்பிக்கொண்டிருந்தாா்.

அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், உமாமகேஸ்வரியை மிரட்டி வாகனத்தை நிறுத்தி அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியையும், மகள் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியையும் பறித்தனா். அந்த நபா்களின் இருசக்கர வாகன சாவியை பறிக்க முயன்ற உமாமகேஸ்வரியை அரிவாளால் தாக்கியதில் அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டது. பின்னா் அவரது மகளையும் மா்மநபா்கள் கைகளால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா்.

புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.