மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

சிவகங்கையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிப் போட்டி

சிவகங்கையில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

சிவகங்கையில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இப்போட்டியினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இப்போட்டியில் 13, 15, 17 வயதிற்குபட்ட மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000-ம் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 250 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் கு. சுகிதா, சிவகங்கை நகா்மன்றத்தலைவா் சி.எம். துரைஆனந்த், வட்டாட்சியா் ப. தங்கமணி, மாவட்ட விளையாட்டு நல அலுவலா் ரமேஷ்குமாா் உள்பட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.