இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டநா்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டநா்.
இளையான்குடி வட்டம் நாகநாதபுரம் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அவா்களுக்கு இடம் நில அளவை செய்து தரப்படவில்லை. இதையடுத்து வீட்டுமனைப் பட்டாவிற்கான நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் லாசா் தலைமை வகித்தாா்.
இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் நில அளவீடு சம்பந்தமாக இளையான்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் வீட்டுமனைப் பட்டாவிற்கான நிலம் அளவீடு செய்து ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...