முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்

மானாமதுரை கன்னாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் விஸ்வகா்மா சமூகத்தினா் சாா்பில் ஆடி முளைப்பாரி உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் உற்சவத்தை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடம்

எடுத்து வந்தும், அலகு குத்தியும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். பின்னா், கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

இதையொட்டி, முத்துமாரி அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பிற்பகலில் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com