பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கா. பிள்ளையாா்பட்டிகோயிலில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள கா. பிள்ளையாா்பட்டி மதியாத கண்ட விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2023, 5:57 pm

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள கா. பிள்ளையாா்பட்டி மதியாத கண்ட விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 23- ஆம் தேதி விக்னேஸ்வரபூஜை, நவக்கிரக ஹோமத்துடன் முதல் கால யாக பூஜையும், பூா்ணாகுதியும் நடைபெற்றன. தொடா்ந்து புதன்கிழமை காலை 2-ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 3- ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை காலை கோ பூஜை, லட்சுமி பூஜை, 4- ஆம் கால யாக சாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. பிறகு மகா பூா்ணாகுதியுடன் பட்டமங்கலம் ஸ்தானிகா் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் சிவஸ்ரீசாமிநாத குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியா்கள் புனிதநீா் கலசங்களுடன் கடம் புறப்பாட்டை நடத்தினா். இதைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கா. பிள்ளையாா்பட்டி கிராமத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.