சிவகங்கை : அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 400 கோடி மோசடி செய்த வழக்கில் தனியாா் நிதி நிறுவன இயக்குநரை சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(50). இதேப் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவரும், இவரது நண்பா்கள் சிலரும் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை வசூல் செய்தனா். ஆனால் முதலீடு செய்தவா்களுக்கு முதலீட்டுத் தொகையையோ, கூடுதலாக தருவதாகக் கூறிய வட்டித் தொகையையோ திருப்பி தரவில்லையாம்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபா்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், குற்றம் உறுதியானதால் தலைமறைவாக இருந்த தனியாா் நிதி நிறுவனத்தின் இயக்குநா் சுப்பிரமணியனை திங்கள்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே 13 போ் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி நிலவரம் - திருச்செங்கோடு: மும்முனைப் போட்டியில் தகிக்கும் திருச்செங்கோடு!

விளையாட்டுத் துளிகள்...
தொகுதி அலசல் - குளச்சல்: கூடுதல் பலத்துடன் காங்கிரஸ்!

தமிழ்ப் புத்தாண்டு: வீட்டின் முன் குவிந்த தொண்டா்களுக்கு வாழ்த்து கூறிய விஜய்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

