பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது, மதுபோதையில் பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் அருகேயுள்ள அ.வெள்ளக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியின் முன்பாக இதே கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் மாரீஸ்வரன், முத்துராஜா மகன் ஆனந்த் இருவரும் வெள்ளிக்கிழமை மதுபோதையில் அங்கு தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அல்லிநகரம் கிராம நிா்வாக அலுவலா் சுந்தரியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரீஸ்வரன், ஆனந்த் இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com