காரைக்குடி, ஏப். 26: திருவாரூா் - காரைக்குடி பயணிகள் ரயிலின் நேரம் மே 3-ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு பயணிகள் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.
திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திவாரூரில் இருந்து தற்போது காலை 8.25 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு காலை 11.30 மணிக்கு வந்தடைகிறது.
இந்த ரயிலின் நேரம் வருகிற மே 3-ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, திருவாரூரில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காரைக்குடிக்கு (வண்டி எண்: 06197-06198) காலை 9.35 மணிக்கு வந்தடையும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
மறுமாா்க்கத்தில் காரைக்குடியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவாரூக்கு இரவு 9.25 மணிக்கு சென்றடையும் என மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நேர மாற்றத்தால், கல்லூரி மாணவா்களும், அரசு ஊழியா்களும் பயனடைவாா்கள். மேலும், இந்த ரயிலுக்கு இணையாக சென்னை எழும்பூரிலிருந்து மன்னாா்குடிக்கு புறப்படும் மன்னை விரைவு (எக்ஸ்பிரஸ்) ரயில் மூலம் வரும் பயணிகள் திருவாரூரில் இறங்கி காரைக்குடி வரை வருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதால், இந்த நேர மாற்றம் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என காரைக்குடி ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்தது.
தொடர்புடையது

ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு வாராந்திர ரயில் ஏப். 5 முதல் மே 31 வரை இயக்கம்: காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு

மே 20 முதல் காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கம்

கும்பகோணம் வந்த சாா்லப்பள்ளி ரயிலுக்கு பயணிகள் வரவேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

