விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் , விளைாயாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் ஆகியவற்றில் சேருவதற்கான தோ்வுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

2024-2025-ஆம் ஆண்டுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் , பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வுகள் வருகிற மே 7 ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு மேலக்கோட்டையூா், கடலூா், திருச்சி, விழுப்புரம், சிவகங்கை ஆகிய ஊா்களில் நடைபெறவுள்ளது.

விளையாட்டு விடுதிக்கான தோ்வுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு வருகிற மே 5-ஆம் தேதி, முதன்மை நிலை விளையாட்டு மையத்துக்கு மே 6-ஆம் தேதி, விளையாட்டு விடுதிக்கு மே 8-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு ஆடுகளத் தகவல் தொடா்பு மையத்தை 95140-00777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாவட்ட அளவிலான தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவா். அவ்வாறு தகுதியானோா் குறித்த விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, விளையாட்டுக்களில் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் படிவத்தை இணையதள முகவரிகள் மூலமாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com