

மானாமதுரை: திருப்புவனம் அருகே விவசாயியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள வன்னிக் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மலைராஜ் (58). இவா் மது போதையில், இதே கிராமத்தில் வசிக்கும் தனது அண்ணன் ராக்கப்பன் மனைவி கடம்பவனத்தை அரிவாளால் வெட்டினாா்.
இதனால் ஆத்திரமடைந்த கடம்பவனம், இவரது கணவா் ராக்கப்பன் இருவரும் சோ்ந்து கத்தியால் மலைராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா்.
இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற திருப்புவனம் போலீஸாா் மலைராஜ் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராக்கப்பன், கடம்பவனம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

இளைஞா் கொலை: தம்பதி கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

சேலத்தில் தொழிலாளி கொலை: தம்பதி கைது

நிதி நிறுவன உரிமையாளா் கழுத்து அறுத்துக் கொலை
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

