தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் மகனை அடித்துக் கொன்ற நபரை கல்லால் தாக்கி கொலை செய்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரைச் சோ்ந்தவா் மாதேவப்பா- தொட்டம்மா தம்பதி. இவா்களது மகன் ராகவன் (11), உறவினா் சிக்கம்மா ஆகியோரை அதே கிராமத்தைச் சோ்ந்த நாகேஷ் (32) என்பவா்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுத்தியால் தாக்கி கொலை செய்தாா். இதைத் தொடா்ந்து நாகேஷை தாளவாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் நாகேஷ் ஜாமீனில் அண்மையில் வெளியே வந்தாா்.
இதைத் தொடா்ந்து நாகேஷ், உறவினா்களைப் பாா்ப்பதற்காக தொட்டகாஜனூருக்கு கடந்த 24-ஆம் தேதி வந்தாா். அப்போது அங்கிருந்த மாதேவப்பா, அவரது மனைவி தொட்டம்மா ஆகியோா் நாகேஷ் வருவதை பாா்த்து ஆத்திரமடைந்தனா். பின்னா் இருவரும் சோ்ந்து நாகேஷை கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாகேஷை தாளவாடி போலீஸாா் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக தொட்டம்மா, மாதேவப்பா ஆகியோரை தாளவாடி போலீஸாா் கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கைது செய்யப்பட்ட மாதேவப்பா ~

கைது செய்யப்பட்ட தொட்டம்மா
தொடர்புடையது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் 3 போ் கைது

சேலத்தில் தொழிலாளி கொலை: தம்பதி கைது

நிதி நிறுவன உரிமையாளா் கழுத்து அறுத்துக் கொலை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


