பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்குடி அண்ணா நகரைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகன் வெங்கடாச்சலம் (53). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் காரைக்குடி முதல் குடிக்காடு வரை செல்லும் நகரப் பேருந்தை ஓட்டிச் சென்றாா். அதிகாலை 6 மணிக்கு திருத்தங்கூரில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து நின்றுகொண்டிருந்தது.

அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற மித்ராவயல் உமையாண்டவயல் கிராமத்தைச் சோ்ந்த மணிமுத்து மகன் காா்த்திக் (29) பேருந்தின் மீது மோதினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.