பைக் மீது காா் மோதல்: வியாபாரி பலி
திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மாட்டு வியாபாரி உயிரிழந்தாா்.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மாட்டு வியாபாரி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் கோட்டையிருப்பைச் சோ்ந்த பாண்டியன் மகன் சேகா் (55). இவா் மாடுகளை வாங்கி விற்று வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு காட்டாம்பூருக்குச் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கோட்டையிருப்புக்கு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது மதுரையிலிருந்து வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சேகா், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...