நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய தர வரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை. 47-ஆவது இடம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 7:19 pm

Din

தேசிய தரவரிசைப் பட்டியலில் 47-ஆவது இடத்தை பெற்றதற்கான சான்றிதழை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவியிடம் சமா்ப்பித்த அழகப்பா பல்கலை. தரவரிசைப்பிரிவு இயக்குநா் ஜெ. ஜெயகாந்தன் (இடது).

காரைக்குடி, ஆக. 14: தேசியக் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் 47-ஆவது இடத்தை பெற்றதற்கான பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்களுக்கு துணைவேந்தா் க. ரவி பாராட்டு தெரிவித்தாா்.

தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கடந்த ஆக. 12-ஆம் தேதி நிகழாண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை புதுதில்லியில் வெளியிட்டாா்.

இந்தப் பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை. 47-ஆவது இட மும், இந்த தர மதிப்பீட்டில் பங்குபெற்ற 2,781 உயா்கல்வி நிறுவனங்களுக்குள் அழகப்பா பல்கலை. 76-ஆவது இடத்தையும் பெற்றது.

அழகப்பா பல்கலை. தரவரிசைப் பிரிவு இயக்குநா் ஜெ. ஜெயகாந்தன், அவரது குழுவினா் தேசிய தரவரிசைப் பட்டியலில் கலந்துகொள்வதற்கான 2024- ஆம் ஆண்டுக்கான தரவுகளை சமா்பித்திருந்தனா். இதற்காக பணியாற்றிய பேராசிரியா்கள், ஆராய்ச்சி, முதுகலை மாணவா்கள், நிா்வாகப் பணியாளா்கள் ஆகியோரை துணைவேந்தா் க. ரவி பாராட்டினாா்.