மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஔவையாா் விருது: தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையாா் விருது பெறத் தகுதியுள்ள மகளிா் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:46 am

Din

தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையாா் விருது பெறத் தகுதியுள்ள மகளிா் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு ஔவையாா் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகிற 31.12.2024 -ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

2025-ஆம் ஆண்டுக்கான சா்வதேச மகளிா் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு தமிழக முதலமைச்சரால் ஔவையாா் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ், சால்வை வழங்கப்படும்.

தகுதிகளையுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகிற 31.12.2024- ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, கையேடாக (தமிழ், ஆங்கிலத்தில் தலா 3 நகல்கள்) தயாா் செய்து சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விவரங்கள் பெறலாம்