எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமாறாக்கியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள தமறாக்கியில் கோயில் திருவிழாயொட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:20 pm

Din

சிவகங்கை அருகேயுள்ள தமறாக்கியில் கோயில் திருவிழாயொட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 32 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

தமறாக்கி-கண்டாங்கிபட்டி சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு பிரிவில் 12 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 20 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுக்கு 5 கி.மீ. தொலைவும், பந்தய எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டது.

பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை சிவகங்கை, இடையமேலூா், தமராக்கி, கண்டாங்கிபட்டி, சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து திரளான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கொண்டு உற்சாகமாக கண்டுகளித்தனா்.