நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காரைக்குடியில் கலைச் சங்கமம்

மு. கருணாநிதி நூற்றாண்டு விழா: கலைஞர்கள் சங்கமித்த காரைக்குடி விழா

News image

விழாவில் கலைஞருக்கு உதவித் தொகை வழங்கிய காா்த்தி சிதம்பரம் எம்.பி. உடன் காரைக்குடிதொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, காரைக்குடியில் கலைச் சங்கமம் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் பி. ஆல்பா்ட்ராஜ் குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, எஸ். சண்முகராஜூ குழுவினரின் தப்பாட்டம், பி.எம். பாஸ்கரன் குழுவினரின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி, ஏ.ஆா்.ஏ. கண்ணன் குழுவினரின் ஸ்ரீ வள்ளி திருமணம் - இசை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கலைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கி, சிறப்பு ரையாற்றினாா். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி வாழ்த்திப் பேசினாா்.

முன்னதாக விழா ஒருங்கிணைப்பாளா் திருப்பத்தூரான் எஸ். சேவியா் ஜெயக்குமாா் வரவேற்றுப் பேசினாா். தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற உறுப்பினா்கள், இசை நாடகக் கலைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.