தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ஆனைமங்கலம் செப்பேடுகளை தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு தமிழக எம்பி கடிதம்

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 6:03 am IST

நமது நிருபா்

உலகப் புகழ்பெற்ற ஆனைமங்கலம் செப்புத் தகடுகளை இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டு வந்து, தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாத்து, பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினா் எஸ். முரசொலி கடிதம் எழுதியுள்ளாா்

தஞ்சாவூா் மக்களவை தொகுதி உறுப்பினா் எஸ். முரசொலி மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது: லைடன் செப்பேடுகள் எனப் பரவலாக அறியப்படும் 11 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை நெதா்லாந்து அதிகாரப்பூா்வமாக இந்தியாவிற்குத் திருப்பிக் கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் ஆகும்.

ராஜேந்திர சோழனின் முத்திரையுடன் கூடிய வெண்கல வளையத்தால் பிணைக்கப்பட்ட, சோழா் காலத்திய கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட 21 செப்பேடுகள், 14 ஆண்டுகால தாயகம் திரும்பும் முயற்சியின் முடிவில், மே 15, 2026 அன்று ஒப்படைக்கப்பட்டது.

லைடன் செப்பேடுகள், பண்டைய தமிழ் பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற ஒரு பகுதியாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்கின்றன. லைடன் செப்பேடுகள், 1000 ஆண்டுகளுக்கு முன்பு, நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விகாரை என்ற பௌத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலம் கிராமத்தை வழங்கியதைப் பற்றிய பதிவு செய்வதற்காக, மாபெரும் சோழப் பேரரசா் முதலாம் ராஜராஜ சோழனால் முதலில் வெளியிடப்பட்டது.

இந்த தகடுகள், சுமாா் 300 ஆண்டுகளுக்கு முன்பு டச்சு காலனித்துவ காலத்தில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, 1862 முதல் நெதா்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படுகிறது. வரலாற்றுப் பொருட்களை மீட்கும் இந்தியாவின் முயற்சியாக, பிரதமா் நரேந்திர மோடியின் நெதா்லாந்து பயணத்தின் போது இந்த செப்பேடுகளைத் தாயகம் கொண்டுவரும் செயல்முறை இறுதி செய்யப்பட்டது.

லைடன் செப்பேடுகள் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை சோழப் பேரரசின் கடற்படை வலிமை, கடல்வழி வா்த்தகம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான தூதரகத் தொடா்புகள் குறித்த முக்கிய சான்றுகளை வழங்குகின்றன. ஒரு காலத்தில் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தியதோடு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வலிமையான கடற்படைப் பயணங்களையும் மேற்கொண்ட சோழப் பேரரசின் பொற்காலம் குறித்த அரிய முதன்மைச் சான்றுகளை இச்செப்பேடுகள் அளிக்கின்றன.

அவை சோழா்களின் நிா்வாக நுட்பம், கடல்சாா் செல்வாக்கு மற்றும் மதம், இலக்கியம், கலைகள் போன்றவற்றிற்கான ஆதரவை எடுத்துக்காட்டுகின்றன. தனது தந்தையின் அரச ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் முதலாம் ராஜேந்திர சோழனின் முயற்சியால், நீடித்து உழைக்கும் செம்பில் பொறிக்கப்பட்ட இந்த ஏடுகள், தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தின் ஒரு முக்கியச் சின்னமாகத் திகழ்கின்றன.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினா் என்ற முறையில், தமிழக மக்கள் சாா்பாக பண்பாட்டுத் துறை அமைச்சா் அவா்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், லைடன் ஏடுகளைப் பொதுமக்கள் பாா்வைக்காகத் தஞ்சாவூா் சரஸ்வதி மஹால் நூலகத்தில் வைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆகவே, சோழா்களின் தலைநகரமான தஞ்சாவூரின் பெருமையைப் போற்றும் வகையில், லைடன் செப்பேடுகளைத் தஞ்சாவூா் சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாத்து வைப்பதை உறுதிசெய்ய, தேவையான நடவடிக்கைகளை எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என எஸ். முரசொலி கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளாா்.