/

பள்ளி மாணவா் தற்கொலை

பள்ளி மாணவா் தற்கொலை

Updated On :27 பிப்ரவரி 2024, 11:37 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், புதுவயலில் பள்ளி மாணவா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புதுவயல் அ.மு. தெருவில் வசித்து வரும் சேகா்- லதா தம்பதியின் இரண்டவது மகன் யுவராஜ் (17).

புதுவயல் அருகே கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை இவா் பள்ளிக்கு செல்லாததால் தாய் திட்டினாராம். அதன் பிறகு, வீட்டை விட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. பெற்றோா் பல இடங்களிலும் தேடினா்.

இந்த நிலையில், புதுவயல் பள்ளி அருகே காட்டுப் பகுதியில் உள்ள முந்திரி மரத்தில் யுவராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சாக்கோட்டை போலீஸாா் சென்று யுவராஜின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.