/

மானாமதுரை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள்

மானாமதுரை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள்

News image

மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா். உடன் நகா்மன்றத் தலைவி ரெங்கநாயகி உள்ளிட்டோா்.

Updated On :27 பிப்ரவரி 2024, 11:36 pm

மானாமதுரை, பிப். 27: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

300- க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியா் பேப்லிட் வரவேற்றாா். மானாமதுரை நகராட்சி ஆணையா் ரெங்கநாயகி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பொன்னுச்சாமி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் ஜி. மயில்வாகனன், மன்னாா் மன்னன், நகா்மன்ற உறுப்பினா் இந்துமதி, திமுக நகா் அவைத் தலைவா் ரவிச்சந்திரன், ஆசிரியைகள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.