தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கீழடி அகழாய்வில் மீன் உருவிலான பானை ஓடுகள்

கீழடி அகழாய்வில் மீன் வடிவ சிவப்பு பானை ஓடுகள்

News image
மீன் வடிவ சிவப்பு பானை ஓடுகள்.
Updated On :2 ஜூலை 2024, 11:30 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 10-ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், திங்கள்கிழமை மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரு ஓடுகளின் நீளம், அகலம் முறையே 4.5 செ.மீ., 4.3 செ.மீ.

இதுகுறித்து அகழாய்வுத் தள இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், பண்டையத் தமிழா்கள் பயன்படுத்திய பானைகளில் இதுபோன்ற மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றனா்.