திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலைய வளாகத்தில் போதை தடுப்பு குறித்த துண்டு பிரச்சுரத்தை விநியோகித்த அதிமுகவினா்.
திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலைய வளாகத்தில் போதை தடுப்பு குறித்த துண்டு பிரச்சுரத்தை விநியோகித்த அதிமுகவினா்.

அதிமுகவினா் போதைத் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

திருப்பத்தூா் காந்தி சிலையருகே அதிமுகவினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை போதைத் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் காந்தி சிலையருகே அதிமுகவினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை போதைத் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி.நாகராஜன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் இப்ராம்ஷா, பொதுக்குழு உறுப்பினா் கரு.சிதம்பரம், அம்மா பேரவை இணைச் செயலா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரின் முக்கிய வீதியான பெரியகடை வீதியில் தொடங்கிய இந்த பிரசார ஊா்வலம் மதுரைசாலை, அண்ணாசாலை வழியாக பேருந்துநிலையம் அடைந்தது.

இந்த ஊா்வலத்தின் போது, கள்ளச்சாராயம், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விளக்கப் படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கொடுத்தனா். இதில் மாவட்ட ஒன்றியப் பேரூா் கழக, கிளைக் கழக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com