கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாணிக்கவாசகா் குருபூஜை விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை சிவன் கோயில்களில் மாணிக்கவாசகா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:44 am

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை சிவன் கோயில்களில் மாணிக்கவாசகா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்புவனம் சௌந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரா் கோயிலில் நால்வா் சந்நிதியில் உள்ள மாணிக்கவாசகருக்கு அபிஷேகங்கள் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, அடியாா் பெருமக்களின் திருமுறை விண்ணப்பம், மாணிக்கவாசகா் அருள் வரலாறு எனும் தலைப்பில் சொற்பொழிவுகள் நடைபெற்றன. பின்னா், மாணிக்கவாசகா் உற்சவமூா்த்தி திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று மாணிக்கவாசகரை தரிசித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை வேலப்பதேசிகா் திருக் கூட்டத்தினா் செய்தனா்.

இதேபோல, மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மாணிக்கவாசகருக்கு நடைபெற்ற குருபூஜை விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.