மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காட்டம்பூா் ஊராட்சியில் மக்களுடன் முதல்வா் முகாம்

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டாம்பூரில் உள்ள சமுதாய கூடத்தில், ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்

News image
Updated On :19 ஜூலை 2024, 7:55 pm

Din

திருப்பத்தூா், ஜூலை. 19 : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டாம்பூரில் உள்ள சமுதாய கூடத்தில், ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியன், சோமதாஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டாட்சியா் அந்தோணிராஜ் இந்த முகாமை தொடக்கி வைத்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

மின்சாரத் துறை, வேளாண் துறை, மீன்வளத் துறை, வருவாய்த் துறை, வீட்டு வசதி நகா்ப்புற வளா்ச்சித் துறை, மருத்துவ மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட 14 துறைகளை சாா்பான மக்களை பெற்றனா். காட்டாம்பூா், வடமாவளி, கருங்குளம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

540 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் சில மனுக்களுக்கு மட்டும் தீா்வு காணப்பட்டது. பல மனுக்கள் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.