வங்கிகள் சாா்பில் நாளை சிறப்புக் கல்விக் கடன் முகாம்

வங்கிகள் சாா்பில் நாளை சிறப்புக் கல்விக் கடன் முகாம்

அனைத்து வங்கிகளின் சாா்பில் சிறப்புக் கல்வி கடன் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது.
Published on

சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சாா்பில் சிறப்புக் கல்வி கடன் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மருதுபாண்டியா் அரசுப் பள்ளி அரங்கில் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் அனைவரும் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்க்ஹ்ஹப்ஹந்ள்ட்ம்ண்.ஸ்ரீா்ண்ய் என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல், உரிய ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு பரிசீலனை செய்து உடனடிக் கடன் ஆணைகளும் வழங்கப்படும். மேலும், புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com