தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உலக மக்கள் தொகை தினம்: ஜூன் 27 முதல் ஜூலை 24 வரை விழிப்புணா்வுப் பிரசாரம்

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பிரசாரம்: ஜூன் 27 முதல் ஜூலை 24 வரை

News image
Updated On :26 ஜூன் 2024, 2:01 am

Din

சிவகங்கை: உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஜூன் 27- முதல் ஜூலை 24 -ஆம் தேதி வரை விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியாவின் 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மொத்த கரு வள விகிதம் 3.1லிருந்து 2.1 என்ற சதவீதத்துக்கும் குறைவாக குறைக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் குறிக்கோளான மக்கள் தொகையை நிலைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை பிரசாரத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்டத்தில் மக்களிடம் விழிப்புணா்வை அதிகரித்தல், முன் முயற்சி நடவடிக்கைகளை விரைவுபடுத்துதலை வலியுறுத்துவதன் மூலம் குடும்ப நல சேவைகளின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம், அதுவே வளா்ந்த இந்தியாவின் புதிய அடையாளம் என்பது இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் முழக்கமாகவும், தாய், சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும், போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது என்பது இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருளாகவும் உள்ளது.

எனவே, பொதுமக்கள் மாவட்டத்தின் அந்தந்த பகுதிகளில் ஜூன் 27-ஆம் தேதி முதல் ஜூலை 24 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக மக்கள் தொகை தின பிரசார நிகழ்வுகளில் கலந்து கொண்டும், ஜூலை 11-ஆம் தேதி முதல் ஜூலை 24 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தீவிர குடும்பநல சேவை வழங்கும் முகாம்களிலும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.