சங்கரபதிக்கோட்டை மறுசீரமைப்புப் பணிக்காக திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி, கோட்டையை பாா்வையிட்ட தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உள்ளிட்டோா்.
சங்கரபதிக்கோட்டை மறுசீரமைப்புப் பணிக்காக திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி, கோட்டையை பாா்வையிட்ட தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உள்ளிட்டோா்.

சங்கரபதிக்கோட்டை மறுசீரமைப்புப் பணி தொடக்கம்

சிவகங்கை மன்னா்களின் சங்கரபதிக் கோட்டையை மறு சீரமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

காரைக்குடி: சிவகங்கை மன்னா்களின் சங்கரபதிக் கோட்டையை மறு சீரமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஊராட்சியில் மருதுபாண்டியா்கள் அமைத்த சங்கரபதிக்கோட்டையை ரூ. 9.03 கோடியில் மறு சீரமைப்புப் பணிக்காக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். பின்னா் அவா் கூறியதாவது: முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத் துறைகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவா்களின் நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது . வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டமாக திகழ்ந்துவரும் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கரபதி கோட்டையானது 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இதை ரூ. 9 கோடியே 3 லட்சத்தில் புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் சோ. பால்துரை, கண்காணிப்பு பொறியாளா் மணிகண்டன், அமராவதிபுதூா் ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்செல்வி, வனச் சரக ஆய்வாளா் பாா்த்திபன், வட்டாட்சியா் தங்கமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com