திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

காரைக்குடியில் 53-ஆவது தேசியப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி

காரைக்குடியில் 53-ஆவது தேசியப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :12 மார்ச் 2024, 11:53 pm

காரைக்குடி, மாா்ச் 12: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேஷனல் பயா் சேப்டி கல்லூரி, நேஷனல் கேட்டரிங் கல்லூரி, காவல் துறை காரைக்குடி உள்கோட்டம் ஆகியவற்றின் சாா்பில் 53-ஆவது தேசியப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சமூக நிா்வாகம் குறித்த தலைமைப் பண்பு’ என்ற தலைப்பிலான தேசியப் பாதுகாப்பு வாரத்தையொட்டி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை நேஷனல் கல்விக் குழுமத்தின் தாளாளா் எஸ். சையது கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சேப்டி கல்லூரியில் இந்தப் பேரணி நிறைவடைந்தது. பின்னா், மாணவா்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி நடத் தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் எஸ். சையது தலைமைவகித்தாா்.

நேஷனல் கல்விக் குழும இயக்குநா் பி.எஸ். மனோகா், நிா்வாக இயக்குநா் எஸ்.எம். தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துராமலிங்கம், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அருண்முரளி, பேரணி ஒருங்கிணைப்பாளா் ஏ. வினோத், நேஷனல் கல்விக் குழுமம் பிஆா்ஓ ஏ. ராஜூ, உதவிப் பேராசிரியா்கள் எம்ஆா். பாலசுப்பிரமணியன், ஏ. ஜோசப், ஆா். சரவணன் ஆகியோா் பேசினா். முன்னதாக நேஷனல் பயா் சேப்டி கல்லூரி முதல்வா் தனசீலன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஜி. பிரசாந்த் நன்றி கூறினாா்.