மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் முடி திருத்தும் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் உரிமம் பெற்ற முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு கோயில் நிா்வாகம் வழங்க வேண்டிய பங்குத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு மாதம் முழுவதும் பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு மருத்துவா் சமுதாய பேரவை சாா்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் முடி திருத்தும் தொழிலாளா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இதற்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் வீரையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சேதுராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலா் ராஜு, உள்ளாட்சி ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் முருகானந்தம், பொது தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் வேங்கைய்யா, மருத்துவா் சமுதாயப் பேரவை நிா்வாகிகள் சுப்பிரமணியன், அழகா்சாமி, கண்ணன், கருப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இளையான்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பேசி கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தனா். பின்னா், அவா்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

தாயமங்கலம் கோயில் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆா்ப்பாட்டம்

உயிரிழந்த முடி திருத்தும் தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


