திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுவின் மாதாந்திரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியன் முன்னிலை வகித்தாா். இளநிலை உதவியாளா் மாணிக்கராஜ் தீா்மானங்களை வாசித்தாா்.
முன்னதாக, ஒன்றிய உறுப்பினா் லெ.சரவணன் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினா்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், கலைமகள், பாக்கியலெட்சுமி, சகாதேவன், ராமேஸ்வரி, துறை சாா்ந்த அலுவலா்கள் ஊராட்சி மன்ற பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய ராமசாமி:
வனத்துறை பகுதியில் உள்ள சாலைகள் வனத் துறையின் அனுமதி பெறாததால் சீரமைக்கப்படாமல் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுப்பினா் கலைமாமணி: வடக்கு இளையாத்தங்குடி பஞ்சாயத்தில் 21 நபா்களுக்கு அரசு பட்டா வழங்கியுள்ள நிலையில் இடம் அளந்து கொடுக்கவில்லை.
இதனால் பட்டா உள்ளோரும் ஆக்கிரமிப்பாளருக்கும் பிரச்னை எழுகிறது. தலைவா் சண்முகவடிவேல்: சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தின் முடிவில் மேலாளா் சேதுராமன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


