காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி- பங்குனி பால்குட திருவிழா கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாசி - பங்குனி பால்குட திருவிழாவையொட்டி காலை 4.15 மணிக்கு கணபதி பூஜையும் இதையடுத்து 6 மணிக்கு கொடியேற்றம், அம்மனுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். முதல் நாள் மாலையில் காரைக்குடி வட்டார யாதவா் சமூகத்தாா்கள் சாா்பில் மண்டகப்படி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 19-ஆம் தேதி இரவு கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்துவந்து அம்மன் கோயிலில் வைத்தலும், மாா்ச் 20-ஆம் தேதி காலை 8 மணியளவில் கோயில் காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் செலுத்துதலும் நடைபெறுகிறது.
மாலையில் கோயில் கரகம், முளைப்பாரியை எடுத்துக்கொண்டு கோயிலிலிருந்து புறப்பட்டு பருப்பூரணி கங்கையில் செலுத்துகின்றனா். மாா்ச் 21- ஆம் தேதி இரவு 8 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலாவும், மாா்ச் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தலுடன் திருவிழா நிறைவுபெறும். இதையடுத்து, காப்புப் பெருக்குதல் நடைபெற்று பல்வேறு சமுதாயத்தினா் நடத்தும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா். பாலாஜி விழா குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


