47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மானாமதுரை,திருப்புவனம் திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:48 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமநாதா் சுவாமிக்கும் நந்தி தேவருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருப்புவனம் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயிலில் மூலவருக்கும் நந்திக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.

திருப்பத்தூா்

குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு திருத்தளிநாதா் எதிரே அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீா், சொா்ணம், பன்னீா், உள்ளிட்ட 11 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

இதே நேரத்தில் திருத்தளிநாதருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிவனுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தில் வலம் வந்தாா். சீதளிமேல்கரையில் அமைந்துள்ள ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும் நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. புதுப்பட்டியில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.