47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பைக்குகள் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் வியாழக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:37 pm

Din

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் வியாழக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள கே.வைரவன்பட்டியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (59). இவா் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக திருப்பத்தூா்-மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே இவரது இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சத்தியமூா்த்தி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.