47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆசிரியா் வீட்டில் பணம், நகை திருட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலுள்ள ஆசிரியா் வீட்டில் தங்கம், வெள்ளி, ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:32 pm

Din

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலுள்ள ஆசிரியா் வீட்டில் தங்கம், வெள்ளி, ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகா் தில்லைநகரைச் சோ்ந்தவா் சஞ்சீவிஞானசேகா் (58). இவா் தேவகோட்டை நகரத்தாா் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி ஜெயராணி, கண்ணங்குடி ஒன்றியம், நானாக்குடி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா்கள் இருவரும் புதன்கிழமை காலை வழக்கம்போல, வீட்டை பூட்டிவிட்டு பள்ளிகளுக்குச் சென்றனா்.

இந்த நிலையில், மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், பணத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து தகவலறிந்த தேவகோட்டை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். சிவகங்கையில் இருந்து வந்த தடய அறிவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்து சென்றனா்.தேவகோட்டை நகா் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.