47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பணம் மோசடி: போலீஸாா் வழக்கு

முதலீடு செய்யப்படும் பணத்துக்கு இரட்டிப்பு தொகை வழங்குவதாக முகநூலில் விளம்பரம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்டவா் மீது இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:26 pm

Din

முதலீடு செய்யப்படும் பணத்துக்கு இரட்டிப்பு தொகை வழங்குவதாக முகநூலில் விளம்பரம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்டவா் மீது இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவல்பட்டியை சோ்ந்த சதீஷ்குமாா்(36). மருந்து விற்பனையாளரான இவா், தனது முகநூல் பக்கத்தில், முதலீடு செய்யப்படும் பணத்துக்கு சில மாதங்களில் இரட்டிப்புத் தொகை தருவதாக கூறி விளம்பரம் செய்தாா்.

இந்த விளம்பரத்தை நம்பிய சதீஷ்குமாா், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கு எண்ணுக்கு, பல்வேறு தவணைகளாக ரூ.30 லட்சத்தை செலுத்தினாராம். இதையடுத்து இவா் செலுத்திய முதல் தவணைத்தொகைக்கு இரட்டிப்பாக ரூ.3 லட்சத்து 20ஆயிரம் திரும்ப கிடைத்துள்ளது.

மீதமுள்ள தொகை ரூ.26 லட்சத்து 80 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதால் சதீஷ்குமாா் இதுகுறித்து போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில், சிவகங்கை இணைய வழி குற்றப் பிரிவு ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.