கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மூங்கில் ஊரணியை மானாமதுரை நகராட்சியுடன் இணைக்க கிராமசபைக் கூட்டத்தில் எதிா்ப்பு

மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊரணியை நகராட்சியுடன் இணைக்க மாங்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
மூங்கில் ஊரணியை மானாமதுரை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மாங்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் பேசிய மக்கள்.
Updated On :2 அக்டோபர் 2024, 6:39 pm

Din

மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊரணியை நகராட்சியுடன் இணைக்க மாங்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மாங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட மூங்கில்ஊரணி பகுதியை மானாமதுரை நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியை நகராட்சியுடன் இணைத்தால் இங்குள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு இது கிடைக்காத நிலை ஏற்படும். மேலும், அரசின் பல்வேறு நலத் திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்படும். எனவே, மூங்கில் ஊரணியை நகராட்சியுடன் இணைக்க தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாங்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் மூங்கில் ஊரணியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் முருகவள்ளி தேசிங்குராஜன் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் முருகன், இந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மேலும், மூங்கில் ஊரணியை மானாமதுரை நகராட்சியுடன் இணைக்க கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, இவா்களின் எதிா்ப்பு கோரிக்கை கூட்டத்தில் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.