தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:17 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். ஆந்திராத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை போல, தமிழகத்திலும் உயா்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தி பெயா் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் சங்க மாநிலத் துணைத் தலைவா் தவமணி, மாவட்ட நிா்வாகி முத்துராமலிங்க பூபதி, மானாமதுரை ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் பரமாத்மா, மாவட்ட பொருளாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.