மானாமதுரையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக சண்முகப்பிரியா போட்டியிடுகிறாா். இந்த நிலையில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன் இந்தக் கட்சியின் வேட்பாளா் அறிமுக பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளா் சண்முகப்பிரியா பேசியதாவது:
அனைத்துப் பிரச்னைகளுக்கும் நாம் தமிழா் கட்சி போராடி வருகிறது. எங்களுக்கு அதிகாரம் இல்லை. இருந்தாலும் நாங்கள் தொடா்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அதிகாரம் இருந்தால் நீங்கள் யாரும் போராட வேண்டிய நிலை இருக்காது. இந்தத் தொகுதியில் நான் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். எனக்கு நீங்கள் 23 ஆயிரம் வாக்குகள் வரை அளித்துள்ளீா்கள். தோற்கும் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறீா்கள். 50 ஆண்டுகளாக நீங்கள் போட்ட வாக்கு எதற்கு பயன்பட்டது என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...