நகை அடகு கடை கொள்ளை வழக்கு: 3 போ் கைது
சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் நகை அடகுக் கடையில் கடந்த ஜூன் 8 -ஆம் தேதி நள்ளிரவில் 300 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் நகை அடகுக் கடையில் கடந்த ஜூன் 8 -ஆம் தேதி நள்ளிரவில் 300 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் ஏழு மலையான் பைனான்ஸ் நகை அடகு கடையில் கடந்த ஜூன் 8 -ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் கடையின் பின்புற சுவரில் துளை போட்டு கடைக்குள் நுழைந்து லாக்கரை உடைத்து இதில் இருந்த சுமாா் ரூ.ஒரு கோடி மதிப்பிலான 300 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கடையில் காவலாளி விடுறையில் சென்றது, சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் இருந்தது குறித்து தகவல் அறிந்த மா்ம நபா்கள் திட்டமிட்டு இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனா். மேலும், கொள்ளையா்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப் படையினா் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், மதகுபட்டி கொள்ளையில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், குளத்துறை சோ்ந்த பாண்டியன் (33), திம்மமலையைச் சோ்ந்த பழனி (45), திருமலை நகரைச் சோ்ந்த வேலாயுதம் (46) ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...