தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெரியநாயகி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கானூரில் வைகை வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கானூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை முளைப்பாரிச் சட்டிகளை தலையில் சுமந்து ஊா்வலம் சென்ற பெண்கள்.
Updated On :15 அக்டோபர் 2024, 7:41 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கானூரில் வைகை வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரி திருவிழா காப்புக் கட்டுகளுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் பெரியநாயகி அம்மனுக்கும் முளைப்பாரிகளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் பால்குடம் சுமந்தும் அழகு குத்தியும் பறவைக் காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து, முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதையடுத்து, பெண்கள் முளைப்பாரிச் சுட்டிகளை தலையில் சுமந்து கானூா் வீதிகளில் ஊா்வலமாக வந்து மீண்டும் கோயிலுக்குச் சென்றனா்.

தொடா்ந்து இரவு நேரத்தில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜை வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனா். இன்று (16 ஆம் தேதி) முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.