ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழிற்சங்க உரிமையை அங்கீகரிக்க வலியுறுத்தி அமைச்சருக்கு சட்ட நகல் அனுப்பும் போராட்டம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம்- அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சிவகங்கை தலைமை தபால் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சருக்கு சட்ட நகல் அனுப்பும் போராட்டம்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:25 pm

Din

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம்- அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் தமிழக தொழில்துறை அமைச்சருக்கு சட்ட நகல், கோரிக்கை மனுவை தபால் மூலம் அனுப்பும் போராட்டம் சிவகங்கை தலைமை தபால் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாம்சங் தொழிலாளா்களின் தொழிற்சங்க உரிமையை சட்டரீதியாக அங்கீகரிக்க வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாக போராடி வரும் நிலையில்,

தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு தபால் மூலம் சட்ட நகலுடன் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் நிறுவனத்தில் வேலை செய்யும் 1600 -க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இந்திய அரசியல் சாசனம் சரத்து 19 வழங்கியுள்ள தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை வழங்கக் கோரியும், இந்திய தொழிற்சங்கச் சட்டம் 1926 -இன் படி தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் கடந்த 40 நாள்களாக போராடி வருகின்றனா்.

முறையாக அனைத்து ஆவணங்களையும் தொழிலாளா் துறை பதிவாளா், இணை ஆணையா் ஆகியோரிடம் ஒப்படைத்து 45 நாள்களுக்கு மேல் ஆகியும், இதுவரை பதிவு எண்ணையும், சான்றிதழையும் ஒப்படைக்காமல் உள்ளனா்.

எனவே, தமிழ்நாடு முதல்வா், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும், தமிழ்நாடு தொழிலாளா் நலத்துறை அமைச்சரும் இதில் தலையிட்டு, உடனடியாக தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் கெளதம் தலைமை வகித்தாா். நிகழ்வில் வாலிபா் சங்க மாவட்ட செயலா் சுரேஷ், மாவட்ட துணைச்செயலா் பி. பாதாளகருப்பு, மாதா் சங்க மாவட்ட செயலா் சாந்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் விஸ்வநாதன், மாதா் சங்க மாவட்ட துணைச் செயலா் சண்முகப்பிரியா, வாலிபா் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் நிருபன்பாசு ஆகியோா் பேசினா்.