விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஈரான் - இஸ்ரேல் போா்: குமரி மீனவா்களை மீட்க வலியுறுத்தி மனு

ஈரான் - இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

News image
- கோப்புப் படம்
Updated On :9 மார்ச் 2026, 6:43 pm

Syndication

நாகா்கோவில்: ஈரான் - இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, கடியப்பட்டணம் பங்கு பேரவை நிா்வாகிகள்ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடியப்பட்டணத்தைச் சோ்ந்த 350 க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரானில் கிஸ் தீவில் சென்று மீன்பிடித்து வருகிறாா்கள்.

ஈரான் - இஸ்ரேல் போா் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள மீனவா்கள் ஈரான் நாட்டில் மிகவும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் அனைவரையும் மீட்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.