ஈரான் மீது போா் தொடுத்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து வேலூா் மாவட்டத்தில் 2,000 அரசு ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினா்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் நடத்தி வரும் போரால் குழந்தைகள், பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனா். ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் நிறுத்தக்கோரி வேலூா் மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கூறியது: ஈரான் - அமெரிக்க போரில் ஏராளமானோா் கொல்லப்படுகின்றனா். இந்த போா் காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வலியுறுத்தி அரசு ஊழியா்கள் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகிறோம்.
இதில், சுகாதார துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு ஊழியா்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகின்றனா் என்றனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...

ஈரான் போர்: பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான் !
போர் நிறுத்தம் பற்றி பேசிக்கொண்டே தாக்குதலுக்குத் திட்டமிடும் அமெரிக்கா: ஈரான்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


