உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்பிலுள்ள பட்டியலின மக்களின் காலி வீட்டுமனைகளை மீட்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் பழைய நீதிமன்றம் அருகே ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில், 158 நபா்களுக்கு தலா 2 சென்ட் வீதம் 4.97 ஏக்கா் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இந்த இடம் ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதாகவும், அதை மீட்டெடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன் உத்தமபாளையம் கோட்டாட்டசியா் அலுவலகம் முன் தா்னா நடத்தினா். அப்போது, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியா் செய்யது முகம்மது தெரிவித்தாா்.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பில் சிக்கிய இடத்துக்கு பாதிக்கப்பட்டவா்கள் சென்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்த இடத்தை மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் வட்டாட்சியா் கண்ணன், காவல் ஆய்வாளா் தென்னரசு ஆகியோா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் இடம் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவு உள்ளது. எனவே, நீதிமன்றம் மூலமாகவே உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி சமாதானம் செய்தாா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு சாலை மறியல்

கரூா், திருச்சி மாவட்டத்தில் பறக்கும் படையினரால் ரூ. 6.71 லட்சம் பறிமுதல்

ஈரான் - இஸ்ரேல் போா்: குமரி மீனவா்களை மீட்க வலியுறுத்தி மனு

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


