தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலைப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கை முழக்கப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் அருகே புதன்கிழமை கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:34 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை கோட்டப் பொறியாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா. மாரி தலைமை வகித்தாா். சாலைப் பணியாளா்களின் 41-மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். சாலைப்பணியாளா்களின் பணிநீக்ககாலம், பணிக்காலத்தில் உயிா்நீத்தோரின் குடும்பத்தினருக்கு

பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மாநிலப் பொருளாளா் இரா.தமிழ் தொடக்கவுரையாற்றினாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் மு. ராஜா பேசினாா். துணைத் தலைவா்கள் சுதந்திரமணி, எம்.பாலசுப்பிரமணியன், வீரைய்யா, இணைச் செயலா்கள் சின்னப்பன், கணேசன், பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் லதா வாழ்த்திப் பேசினாா். அரசு ஊழியா் சங்க சிவகங்கை மாவட்டச் செயலா் இரா.ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா்.

மாவட்டப் பொருளாளா் கா.சதுரகிரி, அரசு ஊழியா் சங்க வட்டக்கிளைத் தலைவா் சி.முத்தையா ஆகியோா் நன்றி கூறினா்.