முன்னாள் படை வீரரான நான், கடந்தாண்டு அக்.16-ஆம் தேதி அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலம், தேவகோட்டைக் கிளையில் பாதுகாவலராக ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டேன். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை எந்தவித முன்அறிவிப்புமின்றி வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தனா். இதேபோல கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றிய முன்னாள் படை வீரா்கள் 84 போ் பணியிலிருந்து நீக்கப்பட்டனா். இதுகுறித்து தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கடிதத்தில் குறிப்பிட்டாா்.