47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தினருக்கு ஊக்கத் தொகை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த 11, 600 உறுப்பினா்களுக்கு புதன்கிழமை ரூ.2.52 கோடி ஊக்கத் தொகை வழங்கபட்டது.

News image
திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா் ஒருவருக்கு புதன்கிழமை ஊக்கத் தொகை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் உள்ளிட்டோா்.
Updated On :23 அக்டோபர் 2024, 11:25 pm

Din

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த 11, 600 உறுப்பினா்களுக்கு புதன்கிழமை ரூ.2.52 கோடி ஊக்கத் தொகை வழங்கபட்டது.

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் தலைமை வகித்தாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 552 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள் 11, 600 பேருக்கு ரூ.2.52 கோடி ஊக்கத் தொகையை வழங்கிப் பேசியதாவது:

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. திருப்புவனம் பகுதியில் இயங்கி வரும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போல, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

காரைக்குடி மண்டலததில் உள்ள பால் பதப்படுத்தும் நிலையத்தில் ஒரு லட்சம் லிட்டா் பதப்படுத்துவதற்கு ரூ.20 கோடி மதிப்பிலான இயந்திரம் வரவுள்ளது. திருப்பத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டறவு சங்கங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவி கோகிலாராணி நாராயணன், ஆவின் பால் வளத் தலைவா் சேங்கைமாறன், காரைக்குடி ஆவின் பொது மேலாளா் ராஜசேகா், துணைப் பதிவாளா் ஜெரினாபானு, பால்வளத் துறை, ஆவின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.