போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :23 அக்டோபர் 2024, 11:33 pm

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜா (62). சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக, இவரை மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆக.17 -இல் கைது செய்தனா்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், ராஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...