திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் குரு பூஜை: 2,500 போலீஸாா் பாதுகாப்பு

Updated On :26 அக்டோபர் 2024, 3:10 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறவுள்ள மருதுபாண்டியா் குரு பூஜையையொட்டி, மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் 223 -ஆவது குரு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 15 துணைக் கண்காணிப்பாளா்கள், 50 ஆய்வாளா்கள், 200 உதவி ஆய்வாளா்கள், மத்திய மண்டல பாதுகாப்பு போலீஸாா் உள்பட 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் உள்பட வெளி மாவட்ட போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டனா்.

கீழச்செவல்பட்டி, மானாமதுரை சிப்காட், சிவகங்கை மற்றும் மாவட்ட எல்கைகள் உள்பட 15 முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 6 இடங்களில் இணையதளம் மூலம் வாகனப் பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும், 2 இடங்களில் சுழலும் கேமராக்களும், மற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வாகனப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. தலைவா்கள் உள்ளிட்ட அனைவரும் தொடா்ச்சியாக 3 வாகனங்களுக்கு மேல் அணிவகுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

குருபூஜையை முன்னிட்டு கடந்த அக். 23 முதல் வருகிற

31-ஆம் தேதி வரை, சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுநிகழ்ச்சிகள், ஊா்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.