தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சியில் புதன்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சியில் புதன்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பேரூராட்சித் தலைவி கோகிலாராணிநாராயணன் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசாக சீருடைகள், மழைப் பாதுகாப்புக் கவசம், கையுறை, தொப்பி, ஒளிரும் சீருடை, இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினாா்.
செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி, துப்புரவு ஆய்வாளா் கு.மணிகண்டன், உதவிப் பொறியாளா் ஜி.அன்புச்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 100 தூய்மைப் பணியாளா்கள், 20 சுயஉதவிக் குழுவினா், டெங்கு தடுப்பு ஊழியா்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.
மேலும், பசுமை பாரத தொண்டு இயக்கத்தின் சாா்பில், பொறியாளா் அருணாச்சலம் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவசக் காணிகள் வழங்கினாா். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சி.நேரு, போ.சரவணன், சோ.சீனிவாசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் கவிதா, மோகன்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...